Saturday, May 18, 2024

“தேசிய கீதம்” தந்த நாயகன் – தாகூர் மறைந்த தினம் இன்று!!

Must Read

நம் அனைவரையும் புல்லரிக்கவைக்கும் “தேசிய கீதம்” . அதனை நமக்கு அளித்த குருதேவ் ரபீந்திரநாத் தாகூர் மறைந்த தினம் இன்று.

“கீதாஞ்சலி” நாயகன்;

மே 6 ஆம் தேதி 1861 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்த தாகூர், வங்காள மொழி இலக்கியத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவந்தவர். அதனை இசை வடிவில் அளித்து மக்களை இன்புற வைத்தவர். தாகூரின் படைப்புகள் அனைத்தும் ஆன்மிகத்தை சார்ந்ததாக இருந்தது.

ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது எங்கே இருந்தீர்கள்?? தீபாவுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

rabindranath-quotes
rabindranath-quotes

அப்படி இருந்தபோது அவரது நேர்த்தியான உரைநடையும், கவிதைநடையும் மக்கள் அனைவரையும் அவர் பால் ஈர்க்கவைத்தது. ” விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” இதற்கு சான்று தாகூர் தான், தனது 7 வயதில் கவிதை எழுத தொடங்கி விட்டார்.

இவரது ஆசை:

தாகூர், ராம்கரில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்த தான் விரும்பினார். ராம்கர் பகுதியில் உள்ள அதன் அழகான சமவெளிகளால் ஈர்க்கப்பட்ட தேசிய கீதம் உருவாக்கினார். அதனால், தான் அங்கு உள்ள இந்த பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்த விரும்பினார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

rabindranath tagore
rabindranath tagore

இப்படி அவர் அதிகமாக இந்த இடத்தை விரும்பியதால், இந்த இடத்திற்கு பின்னாளில் ” தாகூர் டாப்”‘ என்று பெயரிடப்பட்டது. இவர் இயற்றிய “கீதாஞ்சலி” புதினத்திற்காக நோபல் பரிசு பெற்றார், இலக்கிய துறையில். இப்படியாக கவிதை நடையிலும் , இலக்கிய நடையிலும் சிறப்பாக பாடல்கள் இயற்றிய குருதேவ் ரபீந்திரநாத் தாகூர் இந்த உலகத்தை விட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -