தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கோயம்புத்தூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழைப்பொழிவு அதிகரித்து உள்ளது. இதனால் கொரோனாவை சமாளிக்கவா அல்லது மழை தாக்கத்தை சமாளிக்கவா என அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். மகாராஷ்டிராவின் மும்பை, கேரளாவின் மூணாறு ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகள், வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது எங்கே இருந்தீர்கள்?? தீபாவுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

இந்நிலையில் தமிழகத்திலும் மழைப்பொழிவு அதிகமாகி வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Rain
Rain

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கடலில் 3.5 மீட்டரில் இருந்து 4.2 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here