திருப்பதி கோவில் அர்ச்சகர் கொரோனா தாக்கத்தால் உயிரிழப்பு!!

0
Tirupathi Temple
Tirupathi Temple

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் கோவில் அர்ச்சகர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் கோவில் பூட்டப்பட்டது. இந்நிலையில் 48 வயதான அர்ச்சகர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளார்.

திருப்பதியில் கொரோனா:

இந்த வார தொடக்கத்தில் திருப்பதி கோவில் அர்ச்சகருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட பின்னர், அவர் அரசு நியமிக்கப்பட்ட கொரோனா பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்று கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். இந்த பூசாரி சமீபத்தில் திருப்பதி மலைகளில் உள்ள பழங்கால ஆலயத்தில் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Tirupathi
Tirupathi

சென்னையில் 6 ஆண்டுகளாக இருக்கும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் – அச்சத்தில் மக்கள்!!

ஜூன் 11 ஆம் தேதி பக்தர்களுக்காக மலை கோயில் மீண்டும் திறக்கப்பட்டதால், மூத்த அர்ச்சகர் பெடா ஜெயார் சுவாமி மட் உட்பட குறைந்தது 170 ஊழியர்கள் மற்றும் 16 ‘அர்ச்சகர்கள்’ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். திருப்பதியின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ஜூலை 20 அன்று கொரோனா வைரஸால் இறந்தார். இருப்பினும், பக்தர்கள் சன்னதியை பார்வையிட அனுமதிக்கப்படுவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here