சென்னையில் 6 ஆண்டுகளாக இருக்கும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் – அச்சத்தில் மக்கள்!!

0
ammonium nitrate in chennai harbour
ammonium nitrate in chennai harbour

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அமோனியம் நைட்ரேட் வெடி மருந்தால் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த விபத்தினால் பல பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் ஒரு பகுதியே பாலைவனம் போல் ஆகியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் அதே சக்திவாய்ந்த அமோனியம் நைட்ரேட் 740 டன் கடந்த 6 ஆண்டுகளாக துறைமுக கிடங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெய்ரூட்டில் நடந்த விபத்துபோல் தமிழ்நாட்டில்a நடப்பதற்கு முன் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை துறைமுகத்தில் 740 டன் அமோனியம் நைட்ரைட்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இரண்டு நாட்களுக்கு முன் 2750 கிலோ அமோனியம் நைட்ரேட் வைத்திருந்த துறைமுக கிடங்கில் திடீரென தீ பற்றி பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேல் பரிதாமாக உயிரிழந்தனர். 5000 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

lebanon blast
lebanon blast

பெய்ரூட்டில் ஒரு பகுதியா நாசமாகி பாலைவனம் போல் இருக்கிறது. இந்த வெடி விபத்தினால் 10 கி.மீ. சுற்றளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் மக்கள் அனைவரும் வாழ்வாதாரம் பாதித்து இருக்கின்றனர். இந்த விபத்து காரணம் அமோனியம் நைட்ரைட் தான் காரணம் என கூறியது அந்நாட்டு அரசு. இதேபோல் சென்னை அருகே மணலி துறைமுகத்தில் உள்ள கிடங்கில் 740 டன் அமோனியம் நைட்ரைட் கடந்த 6 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என தகவல் வந்தது.

6 ஆண்டுகளாக இருக்கும் அமோனியம் நைட்ரைட்

கரூரை சேர்ந்த ஒரு நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து அமோனியம் நைட்ரைட் இறக்குமதி செய்தது. ஆனால் இறக்குமதி செய்ததற்கான உரிய சரியான ஆவணம் இல்லாததால் அதனை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து 37 கண்டைனர்களில் மணலி துறைமுக கிடங்கில் வைத்திருக்கிறார்கள்.

சீன செயலிகளுக்கு 45 நாட்கள் கெடு – டிரம்ப் அதிரடி!!

ammonium nitrate
ammonium nitrate

6 ஆண்டுகள் ஆகியும் அதை அளிக்காமல் அப்புறப்படுத்தாமலும் இருப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவே அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பாமக கட்சி தலைவர் ராமதாஸும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அமோனியம் நைட்ரைட் உரத்திற்கும் கல்குவாரிக்கும் கிணறுகள் தோண்டுவதற்கு தேவையான வெடிபொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்துவது ஆகும். அம்மோனியம் நைட்ரேட்டை நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் இருந்தால் அது குறிப்பிட்ட அளவு வெப்பத்தை வெளியிடும் பின் அதில் இருந்து வெளிவரும் வெப்பமே நெருப்பாக மாறும் பின் அதில் இருந்து ஆக்சிஜன் வெளியாகும் அதுவே தீ பற்றி எரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறுகின்றனர், இதனை தொடர்ந்து சென்னைத் துறைமுகத்தில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆய்வு நடத்தினர்

தமிழ்நாடு தீயணைப்புதுறை டிஜிபி சைலேந்திரபாபு 740 tionஆய்வு

chennai harbour ammonium nitrate
chennai harbour ammonium nitrate

அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு தமிழ்நாடு தீயணைப்புதுறை டிஜிபி சைலேந்திரபாபு தனது தீயணைப்பு வீரர்களுடன் நேற்று மதியம் சென்றார். அங்கு அந்த கெமிக்கல் வைக்கப்பட்டுள்ள குடோன்களில் ஆய்வு செய்தார். அங்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பின் அந்த மோனையும் நைட்ரைட் 740 டன் முகிழுவதும் இ ஆக்சன் முறையில் ஏலம் விட முடிவு செய்துள்ளதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர். பெய்ரூட்டில் நடந்த விபத்து போல் சென்னையில் நடக்க வாய்ப்பில்லை எனவே மக்களை யாரும் பயப்பிட வேண்டாம் என அதிகாரிகள் கூறினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here