இன்று நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!!

1

விவசாயிகளின் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக ”சக்கா ஜாம்” என்ற பெயரில் இன்று டெல்லி தவிர நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

சாலை மறியல்

டெல்லியில் வேளான் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக இன்று பிப்ரவரி 6 ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. இந்த சாலை மறியல் போராட்டம் இன்று பகல் 12 மணிக்கு துவங்கி 3 மணி வரை டெல்லி தவிர நாட்டின் பிற இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பாரதீய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகாடியத் கூறுகையில், ‘டில்லி, உத்தரகண்ட் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தவிர பிற மாநிலங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். டில்லி எல்லையில் நடக்கும் சாலை மறியல் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்ளலாம். தென் மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்படும். சாலை மறியலின் போது அவசர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். தவிர நாட்டின் அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மறியல் செய்யப்படும். சாலை மறியலில் சிக்கிய வாகனங்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்படும்’ என கூறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து சாலை மறியல் குறித்து விவசாய சங்ககங்களின் கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ”டில்லி தவிர நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் நடைபெறும். பகல் 12 மணி முதல் 3 மணி வரை நடக்கும் இந்த போராட்டத்தில் ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட அவசர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மிக அமைதியான முறையில் இந்த சாலை மறியல் நடைபெறும். போராட்டம் நடத்துபவர்கள் எந்த சூழ்நிலையிலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர்” என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் டில்லி தலைமை காவல் துறை ஆணையர் எஸ் என் ஸ்ரீவாஸ்த்தா, தேசிய பாதுகாப்பு ஆணையர் அஜீத் தோவல் ஆகியோர் நேற்று மத்திய மந்திரி அமித்சாவை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது சாலை மறியலில் வன்முறை ஏற்படாமல் இருப்பதை குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here