டெல்லியில் 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் நாளை சிறப்பு பேரணி – உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடுகள்!!

0

குடியரசு தினமான நாளை டெல்லியில் புதிய வேளாண்சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

விவசாயிகள் பேரணி

மதிய அரசு கொண்டுவந்த புதிய வேளாண்சட்டங்களை ரத்துசெய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நேற்றுடன் கடந்த 60 நாளாக டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசுடனான 11 கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும் தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருந்து வரும் விவசாயிகள் நாளை குடியரசு தினத்தை ஒட்டி டெல்லியில் டிராக்டர்களில் பிரமாண்டமான பேரணியை நடத்த உள்ளனர். இதற்கான பேரணி 100 கி மீ தூரம் நடத்தப்படவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினமான அன்று அனைத்து நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் நடக்கப்படவுள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர். டெல்லிக்குள் இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் டெல்லியை சுற்றி புறநகர் பகுதிகளான சிங்கு, காஜிபூர், திக்ரி , பல்வால் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு மீண்டும் அதே இடத்துக்கு சென்று சேரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அனுமதியுடன் அமைதியாக இந்த ஊர்வலங்கள் நடத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் – ஊரடங்கு நீட்டிப்பு!!

பேரணி குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயசங்கங்கள் அளித்துள்ள அறிக்கையில், விவசாய போராட்டத்தை விளக்கும் அனைத்தும் அலங்கார வாகனத்தில் இருக்கும், ஒரு டிராக்டரில் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர், அனைத்து டிராக்டர்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருக்கும், டெல்லி புறநகர் பகுதிகளில் பேரணி நடைபெறும், டெல்லியில் குடியராசு தின நிகழ்ச்சிகள் முடிந்ததும் பேரணி தொடங்கும், மாலை 6 மணி வரை நடைபெறும், பேரணி மிகவும் அமைதியாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here