இங்கிலாந்தில் அதிகரித்து வரும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் – ஊரடங்கு நீட்டிப்பு!!

0

இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலால் வருகின்ற ஜூலை 17 ம் தேதி வரை அந்நாட்டில் ஊரடங்கை நீட்டியுள்ளதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பு

கடந்த ஜனவரி மாதம் முதல் உலகத்தை ஆட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இன்றும் குறைந்தபாடில்லை. அப்போது பரவிய கொரோனா தொற்றால் உலக நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்திருந்தது. மேலும் இந்த பெருந்தொற்றுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தது. கொரோனாவின் அதிகமான பாதிப்புகள் அமெரிக்காவில் காணப்பட்டது. அதிக உயிரிழப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் கடந்த டிசம்பர் மாதம் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருமாறிய வைரஸ் அதிதீவிர பாதிப்பு தன்மை கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த வைரஸின் தாக்கம் இங்கிலாந்தில் அதிகமாகவே காணப்பட்டது. இங்கிலாந்தின் புதிய வைரஸ் தொற்று மீண்டுமாக உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியது. தொடர்ந்து இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வரை மக்களை பாதுகாக்க அரசு இந்த முடிவெடுத்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலை அறிவித்திருக்கிறது இங்கிலாந்து அரசு. வரும்ஜூலை 17 ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 97,939 பேர் உயிரிழந்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here