தமிழகத்தில் டிஜிட்டல் வாக்காளர் அட்டை- இன்று முதல் அறிமுகம்!!

0

வாக்காளர் அட்டை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஆன்லைனில் தங்களது வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் அட்டை:

தற்போது தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தேர்தலுக்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது அதன் ஓர் பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மக்கள் புதிதாக வாக்காளர் அட்டை பெறுவதற்காக ஓர் முகாமை நடத்தியது. அந்த முகாம் மூலம் பலர் விண்ணப்பித்திருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த விண்ணப்பங்கள் அனைதும் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வாக்காளர் அட்டை தயாரான நிலையில் உள்ளது. மேலும் அனைவருக்கும் வாக்காளர் அட்டையை தனித்தனியாக வழங்கும் அளவிற்கு கால அவகாசம் இல்லாத நிலையில், தேர்தல் ஆணையம் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அது என்னவென்றால் தற்போதைய காலங்களில் இளைஞர்கள் இணையத்தில் புகுந்து விளையாடி வருகிறார்கள்.

டிஜிட்டல் வாக்காளர் அட்டை

அதேபோல் வாக்காளர் அட்டையையும் இணையம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். இந்த திட்டத்தை மத்திய சட்டம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று துவக்கிவைக்கவுள்ளார். மேலும் அவர் முதலாவதாக 5 பேருக்கு வாக்காளர் அட்டை வழங்கவுள்ளார். மேலும் இணையம் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அட்டையை பிடிஎப் முறையில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

பழைய 100 ரூபாய் நோட்டுகளுக்கு தடை?? ரிசர்வ் வங்கி விளக்கம்!!

புதிதாக விண்ணப்பித்தவர்கள் இன்று முதலும் மற்ற வாக்காளர்கள் வரும் 1ம் தேதி முதலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ‘வோட்டர் ஹெல்ப்லைன்’என்னும் செயலி மூலம் ‘வோட்டர் போர்டல்’என்னும் இணையத்திலும் இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டை கிடைக்கும். ஏற்கனவே ஆதார், பான் கார்டு ஆகியவை மின்னணு மயமாக்கப்பட்டுள்ளது. தற்போது வாக்காளர் அட்டையையும் அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here