பழைய 100 ரூபாய் நோட்டுகளுக்கு தடை?? ரிசர்வ் வங்கி விளக்கம்!!

0

பண மதிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக ரிசர்வ் வங்கி பழைய 100 ரூபாய் நோட்டுகளை செல்லாத நோட்டுகளாக அறிவிக்க போவதாக தெரிவித்துள்ளது. இதற்கான விளக்கத்தினையும் ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை:

கடந்த 2016 ஆம் ஆண்டு மோடி அரசு திடிரென்று நாம் அன்றாட வாழ்வியலில் பயன்படுத்திய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இது இந்தியாவின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இதனை அடுத்து, புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் புழக்கத்திற்காக விடப்பட்டது. கூடுதலாக, மத்திய அரசு புதிய 100, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.

நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசு – மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு!!

Economic growth will turn positive by Q1FY22: EACPM member Nilesh Shah- The New Indian Express

இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்பட்டு தற்போது 5 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் ரிசர்வ் வங்கி நாம் பயன்படுத்தும் பழைய 100 ரூபாய் நோட்டுகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. காரணம், தற்போது பெரும்பாலும், மக்கள் அனைவரும் புதிய 100, 200 மற்றும் 500 ரூபாய் தாள்களை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இந்த பழைய 100 ரூபாய் நோட்டுகளை நிறுத்த முடிவு எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி தரப்பு பதில்:

இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து கூறப்பட்டு வந்தாலும், மத்திய அரசு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவில்லை. அதற்கான அறிவிப்பு இன்னும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 100 ரூபாய் நோட்டுகளுடன் 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகளையும் நிறுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

I Have Come With Corona': 20 To 100 Rupee Currency Notes Found At Doorsteps Of People

காரணம், 10 ரூபாய் காய்ன்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டாலும், மக்கள் மத்தியில் இன்னும் அதிக அளவில் புழக்கப்படுவதில்லை. மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இன்னும் பெறப்படாத காரணத்தால், இத்தனையும் நிறுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here