தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி 2021 – வெளியான தகவல்!!

0
5 மாநில தேர்தல் முடிவுகள் - 4 மாநிலங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக! பஞ்சாபை கைப்பற்றும் ஆம் ஆத்மி!!
5 மாநில தேர்தல் முடிவுகள் - 4 மாநிலங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக! பஞ்சாபை கைப்பற்றும் ஆம் ஆத்மி!!

தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகின்ற நிலையில், தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி குறித்த ஓர் தகவல் வெளியாகியுள்ளதது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுசேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவையின் ஆயுள் காலம் முடிவடையப்போகிறது. வரப்போகும் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து கட்ட வேலைகளையும் விரைந்து செயல்படுத்தி வருகிறது. தற்போது இதனை முன்னிட்டு இந்த 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் சட்டப்பேரவை காலம் முடிவடைய உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வரும் மே மாதம் 5ம் தேதி அன்று பள்ளிகளுக்கான பொதுத்தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கு முன்பாகவே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தின் முழு கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடைபெரும் என்று தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா நினைவு இல்லம் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

அந்த கூட்டத்தில் வைத்து தேர்தல் தேதி குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தலை ஒரேகட்டமாக நடத்த அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். எனவே தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் தேர்தல் தேதி குறித்த விவரம் வரும் பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here