அதிரடியாக குறைந்த ஆபரணத்தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஆர்வம்!!

0

தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துவருகிறது. நேற்றயவிலையை விட சென்னையில் தற்போது தங்கம் சவரனுக்கு ரூ 80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைந்து விற்பனை

இந்த வருடத்தின் தொடக்கம் முதல் தங்கத்தின் விலை இறக்கத்தை கண்டிருக்கிறது. ஒருசில நாட்கள் மட்டுமே விலை அதிகரித்திருந்த நிலையில் படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்துகொண்டே வருகிறது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு 4,654 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,079 க்கு விற்பனையானது.

ஜெயலலிதா நினைவு இல்லம் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

நேற்றைய விலையை விட சற்று குறைவாகவே இன்றைய மார்க்கெட்டில் தங்கம் விற்பனையாகிறது. சென்னையில் தற்போது 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 காரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,645 க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50 காசுக்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here