சசிகலா உடல் நிலையில் முன்னேற்றம் – மருத்துவர்கள் தகவல்!!

0

உடல் நல குறைவு மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சசிகலா:

சொத்துகுவிப்பு வழக்கு மூலம் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவரது தண்டனை காலம் வரும் 27ம் தேதியுடன் முடிவடைய போகிறது. இந்நிலையில் யாரும் எதிர் பாரத நிலையில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 20ம் தேதி அன்று சசிகலா சிறையில் இருக்கும் போது உடல் நலம் பாதிக்கப்பட்டார். எனவே அவர் பெங்களுருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சர் பெற்று வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கிடையில் சசிகலாவின் சகோதரன், சசிகலாவின் உடல் நலக்குறைவில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு சிறையில் சரியாக சிகிச்சை வழக்கங்கவில்லை என்றும் புகார் எழுப்பினர். பின்பு விக்டோரியா மருத்துவமனையில் அவருக்கு தொடர் மருத்துவம் அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைவரும் அதிர்ந்துபோனார்கள். இதனால் சசிகலா மருத்துவமனையில் தீவிர பரிசோதனையை மேற்கொண்டு வந்தார்.

உடல் நிலையில் முன்னேற்றம்:

இந்நிலையில் சசிகலா உடல்நலம் குறித்து விக்டோரியா மருத்துவமனை ஓர் தகவல் வெளியிட்டுள்ளது. அதுஎன்னவென்றால்,”சசிகலாவின் உடல் நலம் முன்னேறி வருகிறது. மேலும் அவரது கொரோனா பாதிப்பும் குறைந்து வருகிறது. மூச்சுத்திணறல் பிரச்னையும் குறைந்து வருகிறது. மேலும் அவரது நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம்,சுவாசிக்கும் திறன் சீரான நிலையில் உள்ளது. ஆனால் ரத்தத்தின் சர்க்கரை அளவு 205ஆக உயர்ந்துள்ளது. அதனால் தற்போது அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி 2021 – வெளியான தகவல்!!

மேலும் அவர் நன்றாக உணவு உட்கொள்கிறாள் என்றும், தனியாக அவரால் நடக்க இயலவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சசிகலா மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவித்துள்ளனர். அவரது உடல்நலம் முன்னேற்றம் கண்டுள்ளதால் அவர் ஐசியூவில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் சிறையில் அவருடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அவருக்கும் தீவிர முறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here