Sunday, May 12, 2024

இந்திய சுற்றுப்பயணம் வரும் இங்கிலாந்து அணி – போட்டி பட்டியலை வெளியிட்ட கங்குலி!!

Must Read

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சுற்றுப்பயணம் வரும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கங்குலி அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் பரவி வந்தது. இதனால் பல தொழில்கள் முடக்கப்பட்டது மட்டுமல்லாமல் விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது பல விளையாட்டுகள் படிப்படியாக தொடங்கி உள்ள நிலையில் கிரிக்கெட் தொடர்களும் நடைபெற தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான்கு டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் வர உள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கங்குலி போட்டிகள் குறித்த தகவலையும் அறிவித்துள்ளார். போட்டிகள் நடைபெறுவதற்கான சரியான இடத்தை இன்னும் தேர்வு செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்க இருப்பதால் பார்வையாளர்கள் அனுமதி குறித்து முடிவு இன்னும் எடுக்கவில்லை என்றும் மருத்துவ வட்டத்திற்குள் போட்டிகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

ஐபிஎல் 14 வது சீசன்:

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கங்குலியிடம், இந்தியாவில் 14 வது ஐபிஎல் சீசன் நடைபெற வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பிசிசிஐ தலைவரான கங்குலி ஐபிஎல் போட்டி நடத்துவது அவசியம் தான் என்றார். ஆனால் கொரோனா இரண்டாம் அலை தாக்க இருப்பதால் தற்போது முடிவினை ஆலோசித்து வருகின்றோம் என்று கூறினார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 400 பேர் பங்கேற்ற ஐபிஎல் போட்டி வெற்றிகாரமாக நடந்து முடிந்தது. அதில் 40 ஆயிரம் முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆகையால் இந்தியாவிலும் இத்தகைய பரிசோதனை மேற்கொண்டு ஐபிஎல் போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்வோம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -