நடுக்கடலில் பிகினி உடையில் உணவருந்தும் காஜல் அகர்வால் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றிருந்தார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டும் வந்தார். தற்போது நடுக்கடலில் அரைகுறை ஆடையுடன் உணவருந்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

காஜல் அகர்வால்

தமிழில் வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். ஆனால் முதலில் வெளிவந்த படம் என்றால் அது பழனி தான். இந்த இரண்டு படங்களுமே காஜலுக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும் முதல் படத்திலேயே பாரதி ராஜா இயக்கத்தில் நடித்தது பெரிய விஷயம் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழில் மட்டுமல்ல ஹிந்தியிலும் ஐஸ்வர்யா ராய்க்கு தோழியாக ஒரு படத்தில் நடித்திருப்பார். அந்த அளவிற்கு அந்த படம் பேசப்படவில்லை. இவ்வாறு ஆரம்பகட்டத்தில் பல சறுக்கல்களை சந்தித்த காஜலுக்கு தெலுங்கில் ‘சந்தா மாமா’ திரைப்படம் ஹிட் கொடுத்தது.

kajal agarwal

அதன் பிறகு பிருந்தாவனம் திரைப்படமும் தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் அவருக்கு அடுத்ததாக கிடைத்த மிக பெரிய வாய்ப்பு தான் ‘மகதீரா’. தமிழ், தெலுங்கு என மெகா ஹிட் அடித்தது என்றே சொல்லலாம். அதன் பிறகு தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் காஜல்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

kajal and gautam kitchulu
kajal and gautam kitchulu

தமிழில் அவர் நடித்த ஜில்லா, மெர்சல் போன்றவையும் ஹிட் கொடுக்க ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு ஹிந்தியில் சிங்கம் பட ரீமேக்கில் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக மாறினார்.

இப்படி போய்க்கொண்டிருந்த காஜல் வாழ்க்கையில் அவருக்கு திருமணம் எப்பொழுது என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் பல வருடங்களாக காதலித்து வந்த தொழிலதிபரான கௌதம் கிச்சுலுவை கடந்த மாதம் திருமணமும் செய்துகொண்டார்.

மேலும் பல புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார் காஜல். இவர்கள் ஹனிமூன்காக மாலத்தீவு சென்றிருந்தனர். அந்த புகைப்படத்தையும் காஜல் பகிர்ந்து வந்தார். அங்கு 4 நாட்களுக்கு 40 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். இதனால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது மாலத்தீவில் நடுக்கடலில் அரைகுறை ஆடையுடன் உணவருந்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here