Thursday, May 2, 2024

இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்க வைக்கும் “பரங்கிக்காய் அல்வா” – ட்ரை பண்ணி பாருங்களேன்..!

Must Read

பரங்கிக்காயில் பல சத்துக்கள் நிறைத்து உள்ளது. பொரியல் மட்டும் செய்து சாப்பிட்டு உங்களுக்கு போர் அடித்து இருந்தால் பரங்கிக்காயில் சுவையான மற்றும் வித்தியாசமான ஸ்வீட் செய்யலாம். அதன், செய்முறை இதோ..

தேவையான பொருட்கள்:

  • பரங்கிக்காய் – பாதி
  • பாசி பருப்பு – அரை கப்
  • சர்க்கரை – 1 கப்
  • நெய் – 3 ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்
  • முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, உலர் திராட்சை – தேவையான அளவு
pumpkin halwa
pumpkin halwa

செய்முறை:

  • பரங்கிக்காயை முதலில் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். அதனை தட்டி தனியாக வைத்து கொள்ளவும்.
  • மறுபுறம், பாசி பயிரை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். அதனை நன்றாக மசித்து வைத்து கொள்ளவும்.
  • இப்போது, இந்த இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு ஊற்றவும். இவை இரண்டையும் நன்றாக அடிபிடிக்காமல் கிண்டவும். தண்ணீர் வற்றும் வரை கிண்டவும்.
  • தனியாக ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றை நன்றாக வறுக்கவும்.

இதனை, நாம் சேர்த்து வைத்துள்ள கலவையில் சேர்த்து கிண்டி இறக்கினால், சுவையான பரங்கிக்காய் அல்வா ரெடி..!

பயன்கள்:

ஊட்டச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளில் ஒன்று, பரங்கிக்காய். நாம் இருக்கும் இந்த சமயத்தில் ஊட்டச்சத்து மிகவும் அவசியமான ஒன்று.

Pumpkin
Pumpkin

கம்மியான கொலஸ்ட்ரால் இருப்பதாலும் சத்துக்கள் அதிகம் இருப்பதாலும் இது அனைத்து வயதினருக்கும் உகந்தது. வைட்டமின் ஏ, லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற தாது சத்துக்கள் நிறைந்து உள்ளது.

சுவையாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -