வலிமை தோல்விக்கு படத்தோட அப்டேட் தான் காரணம்.., உண்மையை உடைத்த ஹச் வினோத்!!

0
வலிமை தோல்விக்கு படத்தோட அப்டேட் தான் காரணம்..,உண்மையை உடைத்த ஹச் வினோத்!!
வலிமை தோல்விக்கு படத்தோட அப்டேட் தான் காரணம்..,உண்மையை உடைத்த ஹச் வினோத்!!

நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை திரைப்படம் வெற்றி பெறாததற்கு காரணம் குறித்து இயக்குனர் எச் வினோத் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் :

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக அஜித் குமார் நடித்த திரைப்படம் தான் துணிவு. இந்தப் படத்தையும் இயக்குனர் ஹச் வினோத் இயக்கினார். இவர் கடைசியாக இயக்கிய நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை பொருளாதார ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக படுதோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் துணிவு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த துணிவு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் வினோத் வலிமை படத்தின் தோல்வி குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, வலிமை படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் இணையத்திலும் சரி, பொது நிகழ்ச்சிகளிலும் சரி வலிமை அப்டேட்களை கேட்டு வந்தனர்.

ஆனால் ஒரு படத்திற்கு ஐந்து அப்டேட்கள் மட்டுமே கொடுக்க முடியும். அதையும் மீறி அதிகமாக கொடுத்தால் படத்திலிருந்து சில காட்சிகள் எடுக்க வேண்டியது இருக்கும். மேலும் அப்டேட்டில் எல்லாத்தையும் சொல்லிவிட்டால் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு ஆர்வம் இருக்காது. அதற்காகத்தான் வலிமை படத்தில் அப்டேட்களை வெளியே விடவில்லை. இது தான் சரியாக போகாததற்கு காரணம் என்று நான் கருதுகிறேன் என்று வினோத் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here