“என் இனிய தமிழ் மக்களே” : தன் படத்தின் Intro வை வைத்தே சர்ச்சையில் சிக்கிய பாரதிராஜா! இப்படி வசமா மாட்டிட்டீங்களே!!

0
"என் இனிய தமிழ் மக்களே" : தன் படத்தின் Intro வை வைத்தே சர்ச்சையில் சிக்கிய பாரதிராஜா! இப்படி வசமா மாட்டிட்டீங்களே!!

பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா தமிழ் தாய் வாழ்த்து பாடல் குறித்து பேசியது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இயக்குனர் பாரதிராஜா:

தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து இயக்குனர் சிகரமாக ஜொலித்தவர் தான் இயக்குனர் பாரதிராஜா. இவர் எடுத்த பாதி திரைப்படங்கள் கிராமப்புற மண் வாசனை சார்ந்ததாகவே இருக்கும். அந்த வகையில் இவர் எடுத்த 16 வயதினிலே, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே போன்ற பல திரைப்படங்கள் வெற்றி வாகை சூடியது என்றால் அது மிகையாகாது. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தண்டம் அருகே நட்டலாம் என்ற பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவில் இயக்குனர் சிகரம் பாரதிராஜா கலந்து கொண்டார்.

திடீரென தளபதி விஜய்யை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்.., அப்படி என்னவா இருக்கும்.., குழப்பத்தில் ரசிகர்கள்!!!

அப்போது மேடையில் பேசிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்து பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ் தாய் வாழ்த்து பாடலில் இடம்பெறும் “எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே” என்ற வரியை நீக்கி.., “எத்திசையும் புகழ் மணக்க இருக்கின்ற தமிழே என மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here