கண் பார்வையை காவு வாங்கிய சொட்டு மருந்து., புகழ்பெற்ற மருந்து நிறுவனத்திற்கு தடை! பொதுமக்கள் பீதி!!

0
கண் பார்வையை காவு வாங்கிய சொட்டு மருந்து., புகழ்பெற்ற மருந்து நிறுவனத்திற்கு தடை! பொதுமக்கள் பீதி!!

இந்தியாவில் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்துகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் செயற்கையாக கண்ணீர் வர பயன்படுத்தப்படும் சொட்டு மருந்தை பயன்படுத்தி அமெரிக்காவை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் கண் பார்வை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இந்த சொட்டு மருந்தை சென்னையை சேர்ந்த குளோபல் பார்மா நிறுவனம் தயாரித்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் மருந்துகள் விற்பனை செய்ய அமெரிக்க மருந்து நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மருந்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக குளோபல் பார்மா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது வரை இந்த சொட்டு மருந்தை பயன்படுத்தி 55 பேர் கண் பார்வை இழந்தும், ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

TNPSC குரூப்-4 தேர்வு முடிவு எப்போ? Cut off குறித்த பல லேட்டஸ்ட் தகவல்கள் உள்ளே!!

இதனால் இந்த மருந்தை பயன்படுத்தி யாருக்கேனும் கண் எரிச்சல் போன்ற சிறு பிரச்சனை ஏற்பட்டால் கூட உடனடியாக மருத்துவர் உதவியை நாட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் 84 குழந்தைகள் மரணமடைந்ததை தொடர்ந்து 3வதாக அமெரிக்காவில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உலக நாடுகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here