திடீரென தளபதி விஜய்யை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்.., அப்படி என்னவா இருக்கும்.., குழப்பத்தில் ரசிகர்கள்!!!

0
திடீரென தளபதி விஜய்யை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்.., அப்படி என்னவா இருக்கும்.., குழப்பத்தில் ரசிகர்கள்!!!

பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னரான சின்னத்திரை நடிகர் ராஜு முன்னணி நடிகருடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சின்னத்திரை நடிகர் ராஜு :

ஆரம்பத்தில் சின்ன சின்ன குறும்படங்களை இயக்கி, அதன் பின்னர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகர் ராஜு. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமானார். அதற்கடுத்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் ஹீரோவுக்கு நண்பராக நடித்த போது, விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டை முதலில் வைத்திருக்கும் சோவான பிக் பாஸ் சீசன் 5 வில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த நிகழ்ச்சியில் தனது பேச்சுக்கள் மூலம் மக்களை என்டர்டைன்மென்ட் செய்து பட்டி தொட்டி எல்லாம் ரீச்சானார். அதுமட்டுமின்றி அந்த சீசனின் டைட்டில் வின்னர் கோப்பையையும் தட்டி சென்றார். மேலும் இந்த சோவின் மூலம் சினிமாவில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்தார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ராஜு வீட்ல பார்ட்டி என்ற ஷோவை தொகுத்து வழங்கினார். இப்படி பிஸியாக இருந்த நடிகர் ராஜு தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

“பொம்மை நாயகி” படத்தை பற்றி அந்த மாதிரி பேசிய ஜெயம் ரவி.., கண்கலங்கி நின்ற யோகிபாபு!!

இந்த நிலையில் நடிகர் ராஜு குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சின்னத்திரை நடிகர் ராஜு தளபதி விஜயுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இப்படி திடீர்னு விஜயை சந்திச்சுருக்காருன்னா லியோ படத்துல ஒரு வேல ராஜுவும் இருப்பாரோ என்று ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழாவை ராஜுதான் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கத.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here