மட்டன் சுவையை மிஞ்சும் பலாக்காய் கிரேவி., திரும்ப திரும்ப சுவைக்க தோணும் டேஸ்ட்!!

0
மட்டன் சுவையை மிஞ்சும் பலாக்காய் கிரேவி., திரும்ப திரும்ப சுவைக்க தோணும் டேஸ்ட்!!
மட்டன் சுவையை மிஞ்சும் பலாக்காய் கிரேவி., திரும்ப திரும்ப சுவைக்க தோணும் டேஸ்ட்!!

இனிப்பு சுவையை அள்ளித்தரும் பலா பழத்தை சாப்பிடாதவர்கள் நம்மில் யாரும் இருக்க மாட்டோம். அந்த பலா பழத்தின் காயை வைத்து NON-VEG ரெசிபியின் சுவையை மிஞ்சும் அளவிற்கு, ஒரு சுவையான ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • பலாக்காய் – 1/2 கிலோ
  • மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • தக்காளி – 2
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை விளக்கம்

பலாக்காய் குழம்பு செய்வதற்கு 1\2 கிலோ பலாக்காய்களை வாங்கி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு போட்டு அத்துடன் நாம் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன் பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி விடவும் .

 

 

அதோடு மிளகாய் தூள்,மல்லி தூள், மஞ்சள் தூள், சேர்த்து நன்றாக கிளறி விட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் நாம் நறுக்கி வைத்துள்ள பலாக்காய்களை இதோடு சேர்த்து நன்றாக வேகவைக்கவும். ஒரு 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது நமக்கு சுவையான பலாக்காய் குழம்பு ரெடியாகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here