ஹாலிவுட்டில் கால் பதிக்கும் தனுஷ் – அவெஞ்சர்ஸ் இயக்குனருடன் கைகோர்ப்பு!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ், ஹாலிவுட்டில் மிகப்பெரிய பட்ஜெட்டில் அவெஞ்சர்ஸ் பட டைரக்டர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இப்படத்தை பிரபல OTT தளமான நெட்பிலிக்ஸ் தயாரிக்க உள்ளது.

ஹாலிவுட்டில் தனுஷ்:

தமிழ், ஹிந்தி என திரையுலகில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து கலக்கி வரும் தனுஷ், ஏற்கனவே ‘தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை என்றாலும் தனுஷின் எதார்த்தமான நடிப்பு பரவலாக பேசப்பட்டது. பின்னர் தமிழில் அசுரன் திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ் அதன் ரிலீஸிற்காக காத்திருக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட தனுஷ், அட்ரங்கி ரே என்ற இந்திப்படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோருடன் நடித்து வருகிறார். தற்போது மீண்டும் ஹாலிவுட் பக்கம் திரும்பி உள்ள தனுஷ், புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களாக அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ ஆகியோரின் ‘தி கிரே மேன்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாத்ரூமில் பின்னழகை தூக்கி காட்டிய யாஷிகா ஆனந்த்!!

ஹாலிவுட் பாக்ஸ் ஆபிசில் பல சாதனைகளை படைத்த கேப்டன் அமெரிக்கா – வின்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர்களுடன் தனுஷ் கைகோர்க்க உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் இப்படத்தில் கேப்டன் அமெரிக்கா புகழ் கிறிஸ் எவான்ஸ், ரயன் காஸ்லிங் நடிக்க உள்ளனர். நாவல் ஒன்றை மையமாக கொண்டு இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை பிரபல OTT தலமான நெட்பிலிக்ஸ் வெளியிட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here