இந்திய பவுலர்கள் அசத்தல் – 191 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!!

0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்சில் 93.1 ஓவர்கள் முடிவில் 244 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது.  இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பும்ராஹ் வீசிய 14வது ஓவரில் மாத்திவ் வேட், 16 ஓவரில் ஜோ பர்ன்ஸ் LBW முறையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

விராட் கோஹ்லியின் ரன் அவுட் – வார்னே வருத்தம்!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 1 ரன்னில் அஸ்வின் பந்தில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த டிராவிஸ், கேமரூன் க்ரீன் இருவரும் அஸ்வின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

பின்னர் உமேஷ் யாதவ் பந்தில் மார்ன்ஸ் (47), கம்மின்ஸ் (0), ஹேசல்வுட் (8) வரிசையாக அவுட் ஆகி நடையை கட்டினர். மீண்டும் அஸ்வின் சூழலில் மாயாஜாலம் காட்ட லியொன் (10 )பெவிலியன் திரும்பினர். 72.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 191 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 4, உமேஷ் யாதவ் 3 மற்றும் பும்ராஹ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். இதன் மூலம் இந்திய அணி 54 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் களமிறங்கி உள்ளனர். கடந்த போட்டியில் 0 ரன்னில் முதல் ஓவரிலேயே அவுட் ஆன ப்ரித்வி ஷா இந்த போட்டியில் தனது திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here