விராட் கோஹ்லியின் ரன் அவுட் – வார்னே வருத்தம்!!

0

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணி தற்போது விளையாடி கொண்டிருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ரன் அவுட்டால் தனது விக்கெட்டை இழந்தார். இதனை குறிப்பிட்டு ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரபல சுழற் பந்து வீச்சாளரான வார்னே தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றது. இதில் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்த நிலையில் தற்போது முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மட்டும் பகலிரவு போட்டியாக நடைபெறும். இதில் டாஸ் வென்ற இந்தியா கேப்டன் விராட்கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் இந்தியா அணி பேட்டிங்கில் சொதப்பியுயது. இந்தியா அணி சார்பாக கேப்டன் விராட்கோஹ்லி 74 ரன்கள், ரஹானே 42 மற்றும் புஜாரா 43 ரன்களை குவித்தனர். இறுதியில் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு சுருண்டது .

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வார்னே வருத்தம்:

விராட்கோஹ்லியின் விக்கெட்டை பற்றி வார்னே கூறியதாவது “இந்த போட்டியில் இந்தியா அணியின் கேப்டன் விராட்கோஹ்லி ரன் அவுட் ஆனார். அனால் அதில் அவர் தவறு ஒன்றும் இல்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. அவரை போன்ற பேட்ஸ்மேன்கள் களத்திற்குள் நுழையும் பொழுது மிகப்பெரிய ரன்களை எதிர்பார்ப்பார்கள். ஆனால் இது அனைவரையும் ஏமாற்றியது. ரஹானே பந்தை எதிர்கொண்டு ஒரு ரன் எடுக்க மூயன்றார். அதன்பின் அவர் பின் வாங்கினார். இதனால் எதிர்முனையில் இருந்த விராட் கோஹ்லி ரன் அவுட்  ஆனார். ஆனால் விராட் கோஹ்லி தனது 16வது ரன்களிலே ஆட்டமிழந்திருப்பார். ஆஸ்திரேலிய அணி டி ஆர் எஸ் முறையை தேர்வு செய்திருந்தால் அது பெரிய திருப்புமுனையாய் இருந்திருக்கும். ஆனால் விராட் கோஹ்லி 74  ரன்களில் ஆட்டமிழந்ததால் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது” இதனை வார்னே தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து :

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் மற்றும் டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விராட் கோஹ்லியின் விக்கெட்டை பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது ” ரஹானே அடித்த அந்த பந்தில் ரன் எடுக்க வாய்ப்பே இல்லை, ஏனெனில் பில்டர் மிக அருகில் உள்ளார் ஆனால் ரஹானே அழைப்பிற்கு வந்த நிலையில் கோஹ்லி தனது விக்கெட்டை இழந்துள்ளார் . ஆனால் இதில் ஆச்சிரியத்திற்குரியது என்னவென்றால் ரஹானேவின் இச்ச்செயலுக்கு கோஹ்லி கோவப்படாமல் சென்றதே , இந்த இன்னிங்ஸில்  பல தடைகளை கடந்த கோஹ்லிக்கு இது கொஞ்சம் வலியை தரும்” என்று தனது கருத்தை தெரிவித்தார்.

பலவித அம்சங்களுடன் ‘அயோத்தியில் மசூதி’ – ஜன.26ல் அடிக்கல் நாட்டு விழா!!

இதேபோல் கேப்டன் விராட்கோஹ்லி இதே அடிலெய்டு மைதானத்தில் 2012 ஆம் ஆண்டு ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவரின் 2வது ரன் அவுட் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here