சமையல் எண்ணெய்களை இனி லூசில் விற்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!!

0

மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு இனி எண்ணெய்களை பாக்கெட்டில் மட்டுமே விற்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பொது நல வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகளின் நோக்கம்:

தமிழகத்தில் பல மளிகை கடைகளில் வியாபாரிகள் சமையலுக்கு மக்கள் பயன்படுத்தும் எண்ணெய்களை லூசில் (பாக்கெட்களில் அல்லாமல் லிட்டர் கணக்கில் ) விற்கப்பட்டு வந்தது. மக்களும் தேவைக்கேற்ப கடைகளில் சில்லறையில் வாங்கி பயன்படுத்தி கொள்வர். இப்படியாக லூசில் விற்கப்படும் எண்ணெய்களில் வியாபாரிகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் முந்திரி தோலின் எண்ணெயை கலந்து விற்பனை செய்கின்றனர் என்ற புகார் எழுந்தது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இது குறித்து ஒரு மனுவும் வழங்கப்பட்டது. அதில் “சமையலுக்காக வழங்கப்படும் எண்ணெய்களில் வணிகர்கள் வியாபார நோக்கத்திற்காக கலப்படம் செய்து விற்கின்றனர். இதனால் உடல் உறுப்புக்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது”

பலவித அம்சங்களுடன் ‘அயோத்தியில் மசூதி’ – ஜன.26ல் அடிக்கல் நாட்டு விழா!!

“குறிப்பாக இதயம், கல்லீரல் மற்றும் முளை போன்ற உறுப்புக்கள் பெரிதும் பாதிப்பினை அடைகின்றது. இதனால் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை லூசில் விற்க கூடாது என்று உத்தரவிட வேண்டும்” இவ்வாறாக கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கினை மதுரை நீதிமன்ற நீதிபதிகளாக புகழேந்தி மற்றும் கிருபாகரன் கொண்ட அமர்வு விசாரித்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது, “சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களை பாக்கட்டில் அடைத்து தான் விற்க வேண்டும் என்ற சட்டம் 2011 ஆம் ஆண்டே கொண்டு வரப்பட்டு விட்டது. ஆனாலும், ஏன் சிலர் சில்லறையாக லூசில் விற்கின்றனர்?? சமையல் எண்ணெய்களில் கலப்படம் செய்வோர் மீது ஏன் குண்டர் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை??”

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

“சமையல் எண்ணையின் தரத்தை ஆய்வு செய்வதற்காக எத்தனை ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன?? கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் இது குறித்தான பரிசோதனைகள் மேகொள்ளப்பட்டுள்ளன?? விதிகளை மீறியதாக எத்தனை வழக்குகள் உள்ளன??” இவ்வாறாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதே போல் அவர்கள் கேட்டுள்ள விவரங்களை மாவட்டம் வாரியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். அதே போல் இனி சமையல் எண்ணெய்களை பேக்கிங் செய்து தான் விற்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கினை அடுத்த மாதம் 18 ஆம் தேதி ஒத்தியும் வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here