பலவித அம்சங்களுடன் ‘அயோத்தியில் மசூதி’ – ஜன.26ல் அடிக்கல் நாட்டு விழா!!

0

இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு அடிக்கல் நாட்டும் பணி வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடத்தப்பட உள்ளது. மசூதியின் வடிவமைப்பை பற்றிய தகவல்கள் நாளை வெளியிடப்படும். மேலும் இந்த மசூதியானது பல முக்கிய அம்சங்களுடன் அமைக்கப்படவுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக இடிக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் நிலுவையில் இருந்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அதன்படி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலை கட்டலாம் என்றும், அதற்க்கு பதிலாக அயோத்தியின் முக்கிய இடத்தில் மசூதிக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, சோஹாவால் தாலுக்காவின் தானிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் மசூதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி கட்டுவதற்காக சன்னி வக்ப் வாரியம் சார்பில் இந்தோ இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை (ஐ .ஐ .சி.எப்) என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மசூதி கட்டுவதற்கான வடிவமைப்புகள் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அறக்கட்டளையின் செயலாளர் அத்தார் ஹுசைன் கூறியதாவது: இந்திய நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் தேச ஒற்றுமையை குறிக்கும் வகையில் அரசியல் சாசனம் அறிமுகம் செய்யப்பட்ட நாளான இந்தியாவின் குடியரசு தினத்தன்று பாபர் மசூதிக்கு அடிக்கல் நாடும் பணியை ஆரம்பம் செய்ய உள்ளோம். இதற்கான மாதிரி வரைபடங்கள் நாளை வெளியிட உள்ளோம். மேலும் இந்த திட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை, நூலகம், ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கும் வகையில் சமையல் அறை போன்ற பல முக்கிய அம்சங்கள் அனைத்தும் இந்த வளாகத்தினுள் அமைய உள்ளது.

‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வாரிசு இவர்கள் தான்’!!

புதிதாக கட்டப்படும் இந்த மசூதி, இடிக்கப்பட்ட மசூதியைப் போல் இருக்காது. வட்ட வடிவிலான அமைப்பில் இருக்கும். மேலும் ஒரே நேரத்தில் 2000 பேர் தொழுகை நடத்தக் கூடிய அளவில் பெரியதாக இருக்கும். இந்த வளாகத்திற்கு உள்ளே 300 படுக்கை வசதிகளுடன் கூடிய பல் நோக்கு மருத்துவமனை மற்றும் செவிலியர், துணை மருத்துவ படிப்புகளுக்கான கல்லூரியும் இதன் உள்ள அமைய உள்ளது.

தினமும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் விதத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிப்பதற்காக மிகப்பெரிய சமையல் அறையும் அமைக்கப்பட்டு காலையும், இரவும் மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்கப்படும். மேலும் மதத்தை தாண்டிய சமூகநல மையமாக இந்த வழக்கம் அமையும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here