‘மெண்டல் டார்ச்சர் அனுபவித்தேன்’ – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு!!

0

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முஹம்மது அமீர். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை திடீரென்று அறிவித்து உள்ளார்.  அதற்கு இவர் கூறிய காரணம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

முஹம்மது அமீர்:

2007ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடி வருபவர் அமீர். கடந்த 2009 ஆம் ஆண்டில் இங்கிலாந்து எதிரான போட்டியில் தனது சர்வேதச போட்டிகளை துவக்கினார் இவர் சாதாரணமாகவே சுமார் 140 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் பெற்றவர். இவர் 2009ஆம் ஆண்டில் நடந்த ஐசிசி தொடரில் தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த தொடரில் இவர் தனது அணிக்காக மிகவும் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டில் தக்க ஆதாரத்துடன் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். அதனால் இவருக்கு 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டது.  கடந்த 2015 செப்டம்பர் 2 ஆம் தேதி இவரின் தடை காலம் முடிந்தது. அதன் பின் இவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்தார். இவர் மொத்தம் 147 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.அதில் 259 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெண்டல் டார்ச்சர் அனுபவித்தேன்:

இவர் இலங்கையில் நடக்கும் லங்கா ப்ரீமியர் தொடரில் பங்கேற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவர் பாகிஸ்தான் ஊடகத்திற்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் சில திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.  அவர் கூறியதாவது “இப்பொது இருக்கும் பாகிஸ்தான் அணி நிர்வாகத்துடன் சேர்ந்து என்னால் விளையாட முடியாது, இது எனக்கு மெண்டல் டார்ச்சராக இருக்கிறது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு அறிவிப்பை திடீரென்று வெளியிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் ஓய்வுக்கு பின் ஏதும் அரசியல் காரணம் உள்ளதா என்று அனைவராலும் சந்தேகிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் – 244 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்!!

ஏற்கனவே பாகிஸ்தானில், முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் ஆட்சி நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே அவர் தலைமையிலான ஆட்சி மிக மோசமாக நடக்கிறது என்று எதிர் கட்சியினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்யப்போகிறோம் என்று கூறிவருகிறார்கள். இந்நிலையில் முஹம்மது அமீர் கூறிய கருது இவர்க்கு மேலும் அழுத்தத்தை குடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முஹம்மது அமீரின் ஓய்வு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியதாவது “சர்வதேச போட்டிகளில் இருந்து அமீர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  இது அவரின் தனிப்பட்ட முடிவு இதற்கு நாங்கள் தடையாக நிற்க மாட்டோம்” என்று கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here