கர்ப்பமாக இருக்கும் தனத்திற்காக சமைத்துக் கொடுக்கும் மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் செம ஹாப்பி!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமானதை அடுத்து வீட்டில் உள்ள அனைவரிடமும் அதைப்பற்றி மறைக்கின்றனர். மேலும் தற்போது விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக தனம் கர்ப்பமாகியுள்ளார். தனம் வாந்தி எடுப்பதையும், தலைசுற்றுவதையும் பார்த்த அனைவரும் அது வெறும் பித்தம் என்பது போல சொல்கின்றனர். முல்லையின் அம்மா கூட 15 வருடத்திற்கு பிறகு இனி எங்க குழந்தை வரப்போகுது என்று கேவலமாகவும் பேசினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பலரும் தனத்தின் முகத்தில் உள்ள பொலிவினை கண்டறிய தான் செய்தனர். கஸ்தூரிக்கு கூட தனத்தின் நடவடிக்கையில் உள்ள மாற்றங்கள் தெரிய தான் செய்தது. சரி தனம் எப்போ தான் வீட்டுல இருக்கவங்க கிட்ட தான் கர்ப்பமான விஷயத்தை சொல்ல போகிறார் என்று பார்த்திருந்த வேளையில் தான் மீனாவின் அப்பா மூர்த்தியை பற்றி தவறாக பேசியதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோவிலுக்கு அழைத்து வந்து அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்தார்.

ஆனாலும் அதன் பின் டெஸ்ட் எடுத்து குழந்தை இருப்பதை உறுதியும் செய்துக்கொண்டனர். ஆனாலும் 4 மாதம் ஆன பின் வீட்டில் உள்ள அனைவரிடம் சொல்லி கொள்ளலாம் என மூர்த்தியும் சொல்லிவிட தனமும் மறைத்து விடுகிறார். ஆனால் முல்லைக்கு தனமும் மூர்த்தியும் நடந்துக்கொள்ளும் விதம் சற்று சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கண்டிப்பாக பிரச்சனையும் வரப்போவது தெரிகிறது. இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மூர்த்தி தனத்தை நிற்க வைத்து அவரே வேலை பார்க்கிறார். தனத்திற்காக ஆம்லேட் ஊற்றி தருகிறார். இதற்கு தனியாக ஒரு பாட்டு வேறு.

இப்படியே சந்தோசமாக இந்த ப்ரோமோ முடிவடைந்துள்ளது. ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் பலரும் கர்ப்பமான விஷயத்தை எப்பொழுது வீட்டில் சொல்ல போகிறீர்கள் என்று ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here