Friday, April 26, 2024

அசுரனின் பிறந்தநாள்!! போடு! ரகிட!ரகிட!ரகிட!ரகிட!

Must Read

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் ஜூலை 28 ஆன இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

வாழ்த்து மழை

அவரது ரசிகர் பட்டாளம் டிவிட்டரில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவித்த வண்ணம் உள்ளது.

பல பிரபலங்களும் தனுஷின் பிறந்த நாளுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் என்னும் வெங்கடேஷ் பிரபு

கதாநாயகர்கள் இந்திய அளவில் புகழ்பெறுவது என்பது மிக அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது.கொரோனாவால் பொதுசெயலாளர் மரணம்!! அதிர்ச்சியில் புதுச்சேரி!! அந்த அரிதான சாதனையை நிகழ்த்தியவர்களில் ஒருவர் நடிகர் தனுஷ்.

வெங்கடேஷ் பிரபு என்ற இயற்பெயர் கொண்ட தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை (2002) படத்தில் அறிமுகமானார். தனுஷ் பல சூப்பர்ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார் மற்றும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

ரஜினி மகளுடன் திருமணம்

சமீபத்திய படமான அசுரன் படத்தில் அவரின் நடிப்பு அசத்தல். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை நவம்பர் 18, 2004 அன்று திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2006 மற்றும் 2010 இல் யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்,

தனுஷின் வளர்ச்சி

தனுஷ் பாடல் எழுதுவதிலும், பாடுவதிலும் கைதேர்ந்தவர். அவரது 2013 பாடல் ‘ஒய் திஸ் கொலவெறி டி’ யூடியூப்பில் ஒரு புயலை உருவாக்கியது.

ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மற்றும். ’ராஞ்சனா’ உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படும் திரை ஆளுமை ஆகியிருக்கிறார்.

ஆங்கிலப் படத்தின் நாயகன்

‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ‘ஃபகிர்’ என்னும் ஆங்கிலப் படத்தில் நாயகனாக நடித்ததவர். ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘விசாரணை’ படத்தை தயாரித்தவர் என சர்வதேச கவனத்தையும் பெற்றிருக்கிறார் இவர்.

இயக்குனர் தனுஷ்

இவை தவிர திரைவாழ்வில் பன்முகத் திறமையாளராக இன்னும் பல சாதனைகளைப் புரிந்து கொண்டிருக்கும் தனுஷ் , ‘பா.பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தடம் பதித்தவர்.

போடு! ரகிட!ரகிட!ரகிட!ரகிட!

தனுஷின் பிறந்தாளான இன்று அவரது புதிய திரைப்படமான ‘ஜெகமே தந்திரம்’ படத்தின் first look மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையில் ‘ரகிட!ரகிட!ரகிட!ரகிட!’ என்ற பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

சினிமாவில் 18 ஆண்டுக் காலத்தில் மிகப் பெரிய அளவில் உயர்ந்து நிற்கும் தனுஷ் வரும் ஆண்டுகளில் இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -