விவசாயிகள் போராட்டத்தை தீர்க்க தேசிய அளவில் குழு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

0
supreme court
supreme court

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை நீக்க கோரிய வழக்கில் உச்சநீதி மன்றம், இந்த போராட்டத்தை தீர்ப்பது தொடர்பாக அனைத்து பிரதிநிதிகளின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து உள்ளது.

கடந்த 21 நாட்களாக டெல்லி எல்லையில், புதிதாக போடப்பட்ட வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி இந்திய விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியுள்ளனர். இதனால் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமாகிவிடும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விவசாயிகள் போராட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து தெரிவிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விவசாயிகளின் 21 நாள் தொடர் போராட்டத்தினால் மத்திய அரசு பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. புதிய வேளாண்சட்டங்களை முழுவதுமாக நீக்கும் வரை தாங்கள் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

“சாங்கோ 5” விண்கல திட்டத்தின் மூளையாக செயல்படும் 24 வயது பெண்!!

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, விவசாயிகளின் போராட்டத்தினால் கொரோனா நோய் பரவல் அதிகமாக வாய்ப்புள்ளது என்று மனுதாரர் தரப்பில் இருந்து கூறப்பட்டது. ” விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? மேலும் சாலைகளை மூடியது யார்?? என்பதி போன்ற அனல் பறக்கும் கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் குழு அமைக்கும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். அந்த குழுவில் விவசாயிகள் சங்க தலைவர்கள், மத்திய அரசு உள்ளிட்ட எல்லா பிரதிநிதிகளும் இருப்பார்கள் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது. விவசாயிகளின் இந்த போராட்டம் விரைவில் தேசிய பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here