பெண் குழந்தைக்கு அப்பாவான கேன் வில்லியம்சன் – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆன கேன் வில்லியம்சனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் போட்டோவுடன் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கேன் வில்லியம்சன்:

கடந்த 2007 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு எதிரான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான நியூஸிலாந்து அணியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கினார் கேன் வில்லியம்சன். கடந்த 2008 ஆம் ஆண்டில் நடந்த 19 வயதிற்குற்பட்டோர்க்கான உலக கோப்பை தொடரின் நியூஸிலாந்து அணியின் கேப்டனாக பதவி ஏற்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பின் நடந்த 2012 ஐசிசி உலக கோப்பை டி 20 போட்டியிலிருந்து இவர் நியூஸிலாந்து அணியை வழி நடத்தி வருகிறார். உலக தர போட்டிகளை தனது அணிக்காக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது கேப்டன்ஷிப்பும் மிகவும் சிறப்பாக இருக்கும். அதில் மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளிலும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் இதுவரை 81 டெஸ்ட் போட்டிகள், 151 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையான கேன் வில்லியம்சன்:

இவர் தனது தோழியான சாரா ரஹீம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை கேன் வில்லியம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்தார். இதற்காக தான் அவர் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இந்திய அணி அறிவிப்பு!!

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இவர் பங்கேற்கமாட்டார். மீதமுள்ள போட்டிகளில் இவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இவருக்கு பெண் குழந்தை பிறந்ததை தெரிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here