Friday, May 3, 2024

நிலவு ஆய்வுக்கான “சாங்கோ 5” விண்கல திட்டத்தின் மூளையாக செயல்படும் 24 வயது இளம்நாயகி – சீன மக்கள் பெருமிதம்!!

Must Read

சீனா அனுப்பியுள்ள “சாங்கோ 5” என்ற விண்கல முயற்சியில் முக்கிய பங்கு ஆற்றிய ஸூ செங்க்யூ என்ற 24 வயது பெண்ணை சீன அரசாங்கம் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு பெருமைபடுத்தியுள்ளது. தற்போது இவரை தான் சீன மக்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

“சாங்கோ 5” விண்கலம்:

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா பூமியின் துணைக்கோளான நிலவில் விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்தது. இதற்கு அடுத்ததாக ரஷ்யாவும் தனது விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. தற்போது நிலவின் பாறை துகள்களை ஆய்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் சீன அரசாங்கம் “சாங்கோ 5” என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. நிலவில் சென்று சாதனை செய்தவர்களின் பட்டியலில் சீனாவும் இணைந்துள்ளது. இதன் காரணமாக இந்த விண்கல திட்டத்திற்கு உழைத்தவர்களை பெருமைப்படுத்த நினைத்த சீனா அரசாங்கம் தங்களது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இந்த விண்கலத்திற்காக பணியாற்றியவர்களின் பெயரை பதிவிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் ஸூ செங்க்யூ என்ற 24 வயதுடைய பெண்ணின் பெயரையும் பதிவிட்டுள்ளது. இவர் சீனாவின் விண்வெளித்துறையில் கமண்டராக பணிபுரிந்து வருகின்றார். இவர் “சாங்கோ 5” விண்கலத்திற்காக ராக்கெட் கானக்டர் சிஸ்டம் பணியினை சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். இதனால் அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஒரு சிறப்பான பணியினை செய்து கொடுத்ததும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் செங்க்யூ “வெண்சங்” ஏவுகணை பணிகளுக்காக பணிபுரிய சென்றுவிட்டார். அவரது இந்த அடக்கம் காரணமாக சீன தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அவரை தொடர்பு கொண்டு பேட்டி எடுக்க கேட்டுள்ளது. ஆனால், அதனை திட்டவட்டமாக செங்க்யூ மறுத்துள்ளார்.

பழைய பப்ளிமாஸ் போலவே உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் – வெளியான புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்!!

தனது வேலையில் புகழ் குறுக்கிட்டுவிட கூடாது என்பதற்காக பேட்டி எடுக்க ஒத்துக்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்ததாக தொலைக்காட்சி நிறுவனம் கூறியுள்ளது. இதனை அடுத்து சீன மக்கள் மற்றும் நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். சீனாவின் வரலாற்று சிறப்பு மிக்க விண்கலத்திற்கு பின் ஒரு பெண் இருப்பது உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் அவர் ஒரு ஊக்கமாக இருப்பதில் எந்த வித ஆச்சரியமும் இல்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -