பழைய பப்ளிமாஸ் போலவே உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் – வெளியான புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்!!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவிற்கு வந்த குறுகிய காலகட்டத்திலேயே மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் கீர்த்தி. இந்நிலையில் மிகவும் உடல் எடையை குறைந்திருந்த கீர்த்தி பழைய மாதிரி குண்டாக ஆகியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ்

தமிழில் வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முதல் படத்திலேயே தனது வசீகர அழகால் மக்கள் மனதை கொள்ளைக்கொண்டார். ஆனால் அந்த படம் அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பின் தான் இவருக்கு சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் அவரது கேரியரையே மாற்றியமைத்தது. இதில் அவரது ரியாக்சன், அழகு அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்தது.

இதனால் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார் கீர்த்தி. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் கீர்த்தி. மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார்.

சேது முதல் சித்ரா வரை..! 2020 இல் நிகழ்ந்த திரையுலக பிரபலங்களின் மரணம் – மனதை உலுக்கிய பட்டியல்!!

திரையுலகிற்கு வந்த சில நாட்களிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் அளவிற்கு உயர்ந்தார். இந்நிலையில் சில காலமாக அவரது மார்க்கெட் சரிவில் உள்ளது. இதற்கு காரணம் அவர் தடாலடியாக அவரது உடல் எடையை குறைத்து தான். கீர்த்தியின் அழகே அந்த லேசான பப்ளிமாஸ் தோற்றம் தான்.

ஆனால் தற்போதோ அவர் உடல் இழைத்து இருக்கும் கீர்த்தியை ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது. மேலும் தற்போது அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக்கி வருகிறார்.

இவரும் படவாய்ப்புக்காக இப்படி செய்கிறாரா?? என கலாய்த்தும் வருகின்றனர். இந்நிலையில் வெள்ளை நிற உடையில் சற்று பூசினார் போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பழைய கீர்த்தி திரும்ப வந்துவிட்டதாக குஷியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here