ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இந்திய அணி அறிவிப்பு!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் விபரம் வெளியாகி உள்ளது. இதில் இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள்,3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஒரு நாள் மற்றும் டி 20 தொடர்கள் ஏற்கனவே முடிந்து விட்டது. அதில் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் டி 20 தொடரை இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையே நாளை டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மட்டும் பகலிரவு போட்டியாக நடைபெறும்.

வாய்ப்பை இழந்த ஷுப்மன் கில்:

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது போட்டிக்கான இந்திய அணியின் வீரர்களின் விபரம் வெளியாகி உள்ளது. அதில் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு முதலாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பளிக்கவில்லை. இது அனைவரையும் பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. துவக்க வீரராக ப்ரித்வி ஷா களம் இறங்க உள்ளார். ரிஷப் பண்ட இல்லாத நிலையில் விக்கெட் கீப்பராக சாஹாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

முதலாவது டெஸ்டுக்கான இந்தியா அணி விவரம் வருமாறு:

விராட் கோஹ்லி (c)
ப்ரித்வி ஷா
மயங்க் அகர்வால்
புஜாரா
ரஹானே (vc)
விஹாரி
சாகா (wc)
அஸ்வின்
உமேஷ் யாதவ்
ஷமி
பும்ராஹ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here