Monday, May 20, 2024

ஊரடங்கில் மேலும் என்னென்ன தளர்வுகள்?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

Must Read

பொது முடக்கம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி முடியவுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (அக்டோபர் 28) மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அடுத்தகட்ட பொது முடக்கத்தில் இன்னும் எந்தெந்த தளர்வுகள் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு:

மார்ச் மாதம் கொரோன பரவலை கருத்தில் கொண்டு மத்திய அரசு நாடு முழுவதும் பொது முடக்கத்தை அறிவித்து இருந்தது. இதன் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களான மால்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என்று அனைத்தும் மூடப்பட்டன. மாதந்தோறும் கொரோனா பரவல் விகிதத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த மாதங்களின் மருத்துவ குழு நிபுணர்களின் ஆலோசனைப்படி பொது போக்குவரத்துகள் இயக்கப்பட்டன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த மாதம் 31 ஆம் தேதியுடன் பொது முடக்கம் நிறைவடைய உள்ளது. அடுத்த மாதத்தில் எந்தெந்த தளர்வுகள் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படாமல் உள்ளன. பண்டிகை காலம் நெருங்கவுள்ளதால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

எந்தெந்த தளர்வுகள்??

மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தால் பேருந்துகள் மற்றும் பயணியர் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால் கண்டிப்பாக மின்சார ரயில் சேவைகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அதற்கு அடுத்ததாக, கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக திரைத்துறையினர் அதிகமான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனால் திரையரங்குகள் திறப்பதற்க்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்காக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதனால் அடுத்த மாதமும் பள்ளிகளை திறக்க வாய்ப்புகள் இல்லை என்று தான் தெரிகிறது. நாளை நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிக்க உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -