Tuesday, May 21, 2024

ஆண் அரசு ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு – சம்பளத்துடன் வழங்கும் நடைமுறை அமல்!!

Must Read

அரசு பணிகளில் உள்ள ஆண் பணியார்களுக்கு தங்களது குழந்தைகளை பராமரிக்க அரசு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டதாகவும், மக்களை இது போதுமான அளவு சென்றடையவில்லை என்றும் தெரிவித்தார்.

பேறுகால விடுப்பு:

அரசு துறைகளில் பணிபுரிவோர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அரசு சார்பில் பல தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிடும்படி ஒன்று தான் பேறுகால விடுப்பு. கர்ப்பமான பெண் ஒருவர் தனது 6வது மாதத்தில் இருந்து அரசு விடுப்பு எடுத்து கொள்ளலாம். அவர்களது உடல் ஆரோக்கிய நலன் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு அரசு இவ்வாறாக செய்கிறது. தற்போது அரசு பணிகளில் பணிபுரியும் ஆண்களும் தங்கள் குழந்தைகளை பாரம்பரிக்க வேண்டும் என்றால் அரசு ஊதியத்துடன் கூடிய விடுப்பினை எடுத்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மனைவியினை இழந்தோர், விவாகரத்து பெற்று குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போர் மற்றும் ஒற்றை பெற்றோராக இருப்போர் ஆகியவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தி அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இது குறித்து எடுத்துரைத்தார்.

அமைச்சர் எடுத்துரைத்தார்:

அவர் கூறியதாவது, “தற்போது அரசு பணிகளில் உள்ள ஆண் பணியாளர்களுக்கும் குழந்தைகளை பாரம்பரிக்க ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. அரசு பணியாளர்களின் வாழ்வியல் முறையினை எளிதாக்குவதற்கான முயற்சியாக இது கருதப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கான உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டன”

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

“ஆனால், இது மக்களை போதுமான அளவு சென்றடையவில்லை. அரசு பணியில் இருக்கும் ஒருவர் விடுப்பின் போது பயணங்களை மேற்கொள்ளவும் தகுதியுடையவர் ஆவார். இந்த குழந்தைப்பேறு விடுமுறை முதல் 365 நாட்களுக்கு 100 சதவீத ஊதியத்துடனும், அடுத்த 365 நாட்களுக்கு 80 சதவீத ஊதியத்துடனும் வழங்கப்படும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -