ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் & டி20 தொடர் – இந்திய அணியில் 4 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு!!

0

பிசிசிஐயின் தேர்வுக் குழு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் பங்குபெற உள்ள இந்திய அணியை அறிவித்து உள்ளது. இதில் வருண் சக்ரவர்த்தி, நடராஜன் ஆகிய தமிழக அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்திய அணி அறிவிப்பு:

ஐபிஎல் 2020 தொடர் முடிவு பெற்றவுடன் இந்திய அணி, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில் பங்கேற்க உள்ள அணி விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது காயத்தினால் அவதிப்பட்டு வரும் இந்தியாவின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, மூன்று அணிகளிலும் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக ஐபிஎல் போட்டிகளில் அதிரடி காட்டி வரும் கேஎல் ராகுல் துணை கேப்டன் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். விலா எலும்புக் காயத்துடன் அவதிப்படும் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவும் அணியில் இடம்பெறவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர்களான நவ்தீப் சைனி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஐபிஎல் 2020 இல் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளரான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, முதன் முதலாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். சஞ்சு சாம்சனுக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் டி 20 அணியில் இடம் பிடித்துள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கமலேஷ் நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பொரெல் மற்றும் டி. நடராஜன் ஆகிய நான்கு கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களும் இந்திய அணியுடன் பயணம் செய்யவுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்தது. அவர்கள் விளையாடும் 15 அணியில் இடம்பெறாவிட்டாலும் சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு இது சிறந்த தொடர்ச்சியாக அமையும்.

டெஸ்ட் அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), மாயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்திமான் சஹா, ரிஷாப் பந்த், ஜஸ்பிரத் பும்ராஹ், முகமது ஷமி, உஷே யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ்.

ஒருநாள் அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ராஹ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, சர்துல் தாக்கூர்

டி 20 அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here