Saturday, May 4, 2024

ரசிகர்கள் விரும்பும் நாயகன் – நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பிறந்தநாள்!!

Must Read

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பிறந்த தினம் இன்று.

கேன் வில்லியம்சன்:

இவ்வாறு தனது 19 வது வயதில் கிரிக்கெட் உலகத்தில் நுழைந்தார். இவர் வலதுகை பேட்ஸ்மேன். இவர் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினர். கடந்த 2019 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார்.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – பதிவு செய்யும் ரஷ்யா!!

kane willaimson
kane willaimson

மேலும் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் (578) எடுத்த அணித்தலைவர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு 2019 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது ஐசிசியால் வழங்கப்பட்டது.

ரசிகர்கள் மனதை வென்ற வீரர்:

இவரை அனைவர்க்கும் பிடிக்கும் என்று அனைவரும் சொல்லும் காரணம், இவருக்கு கிரிக்கெட் மேல் இருக்கும் மரியாதையும் மற்றவர்களில் உணர்வுகளை புரிந்து கொள்பவர் என்பதால் தான் . கடந்த 2019 ஆம் நடத்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி களம் இறங்கியது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

kane willaimson in 2019 worldcup
kane willaimson in 2019 worldcup

அந்த போட்டியில், பவுண்டரி கணக்கு அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என்று அறிவித்ததும், அனைவரும் எதிர்பார்த்தது, கேன் கோபப்படுவார் சண்டை போடுவார் என்று ஆனால், அவர் எதுமே செய்யாமல் அமைதியாக சிரித்து விட்டு சென்று விட்டார். இது தான் அவரை அனைவர் பால் ஈர்க்க வைத்தது.

இன்று தனது 30 வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார், கேன் வில்லியம்சன், அவருக்கு அனைத்து ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -