தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

0
rain report in tamilnadu
rain report in tamilnadu

கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. மழை ஒரு சில மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் நீலகிரி, தேனி, கோவை மிக கன மழையும் மற்றும் மற்ற ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்து உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ்நாட்டின் மழை நிலவரம்

கனமழை தொடர்ந்து ஐந்து நாட்களாகியும் நீலகிரி மாவட்டத்தில் விடாமல் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 36 செ.மீ தேவாலாவில் மழை பெய்துள்ளது. தென் மேற்கு பருவமழை அந்தமான் மற்றும் வங்ககடலில் அதிகமாக இருக்கிறது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பயங்கரமாக விடாமல் பெய்து வருகிறது. அதனால் கேரளா, இரு மாநிலங்களுக்கும் அருகில் உள்ள தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும் கன மழை பெய்கிறது.

nilgiris rain
nilgiris rain

சென்னை வானிலை ஆய்வு மையம்  நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பிரதேச பகுதியிலும் திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலுார் மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியிட்டது.

rain tamilnadu
rain tamilnadu

60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் மத்திய மேற்கு, தென் மேற்கு, அரபிக்கடல் பகுதிகளில் உள்ள மீனவர்கள் தொடர்ந்து 4 நாட்களை அதாவது 11 தேதி வர கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here