இ பாஸ் வழங்க லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – நீதிமன்றம் அதிரடி!!

0
tn e pass
tn e pass

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு செல்ல இ பாஸ் கட்டாயம் நடைமுறை நீண்ட நாட்களாக அமலில் உள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், அவ்வாறு லஞ்சம் பெரும் அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு:

திருப்பூர் நூற்பாலையில் பணியமர்த்தப்பட்டு உள்ள மாணவிகளை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் இ பாஸ் இல்லாமல் மாணவிகள் அவர்களின் ஊருக்கு கொண்டு செல்லப்பட்டதாக மனுதாரர் தெரிவித்தார். இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி கொண்ட அமர்வு உரிய காரணங்களுக்கு இ பாஸ் பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளதாக தெரிவித்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

Chennai_High_Court
Chennai_High_Court

எட்டு வழி சாலை வழக்கு – ஒத்தி வைத்தது நீதிமன்றம்!!

மாறாக 500, 2000 ரூபாய் லஞ்சம் பெற்று தரகர்கள் மூலம் லஞ்சம் அளித்து இ பாஸ் வாங்கி வருவதாக தெரிவித்தனர். இத்தகைய கொரோனா ஊரடங்கு காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அரசு ஊழியர்களுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர். மேலும் நூற்பாலைகளில் உள்ள பணியாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட நடவடிக்கை எடுக்கவும், குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா என ஆய்வு செய்யவும் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here