இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் – பக்கவிளைவுகள் எதிரொலி!!

0
Corona Vaccine
Corona Vaccine

அமெரிக்காவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கிய ‘கோவிஷீல்ட் தடுப்பூசி’ பரிசோதனை இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் பக்கவிளைவுகள் ஏற்பட்ட காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

தடுப்பூசி பரிசோதனை:

கோவிஷீல்ட் தடுப்பூசியின் அடுத்த வாரம் முதல் இந்தியாவில் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை 17 இடங்களில் 1600 பேருக்கு நடத்த திட்டமிட்டு இருந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இங்கிலாந்தில் தடுப்பூசி பரிசோதிக்கப்பட்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்ட காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இங்கிலாந்தில் பாதிப்புக்கு உள்ளான நோயாளி குறித்து விரிவான அறிக்கையை ஏன் அனுப்பவில்லை என்று இந்திய மருந்துகள் ஒழுங்குமுறை ஜெனரல் தனது அறிவிப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

covishield
covishield

பசு இறைச்சிக்கு தடை – இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் கூட்டாக தடுப்பூசியை உருவாக்கி வரும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா, தன்னார்வலருக்கு “விவரிக்க முடியாத பக்கவிளைவுகள்” ஏற்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி சோதனைகளில் இதுபோன்ற இடைநிறுத்தங்கள் “வழக்கமானவை” என்றும் கூறியுள்ளது. இதனால் தடுப்பூசி பரிசோதனையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டிலாவது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருமா? என்கிற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here