கார் வாங்குபவர்களுக்கு அரிய வாய்ப்பு – குறைந்த வட்டியில் வாகனக்கடன்!!

0
car loan
car loan

மார்ச் மாதத்தில் போடப்பட்ட பொது ஊரடங்கு காரணமாக போக்குவரத்துகள் யாவும் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு வெளியிட்ட தளர்வுகளால் காரின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் தேவையை பொறுத்து கார் நிறுவனங்கள் தவணை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

கார் விற்பனை

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வெளியே செல்வது குறைந்தது. மேலும் போக்குவரத்து சேவைகள் யாவும் நிறுத்தப்பட்டன. இதனால் கார் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. தற்போது அரசு பல தளர்வுகளை வெளியிட்டு வருகிறது. மேலும் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக மக்கள் பலர் பொது போக்குவரத்தை தவிர்த்து வருகின்றனர். இதனால் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

car loan
car loan

இதனால் மக்களின் தேவையை நிறைவு செய்யும் விதமாகவும், விற்பனையை அதிகரிக்கும் நோக்குடனும் மாருதி மற்றும் டாடா உள்ளிட்ட சில நிறுவனங்கள் அட்டகாசமான சில சலுகைகளை வழங்கியுள்ளது. மக்களுக்கு ஏற்ற தவணை முறைகள் மற்றும் சந்தா மூலமாக காரை பயன்படுத்துதல் போன்ற முயற்சிகளை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. குறைந்த வட்டிக்கு சில பேங்குகள் கார் கடனை வழங்குகின்றனர். கீழே கொடுக்கப்பட்ட விபரங்கள் ரூ.10 லட்சம் கடனுக்கு வழங்கப்பட்டது.

car loan
car loan
  • பஞ்சாப் & சிந்த் பேங்க் – 7.10%,
  • சென்ட்ரல் பேங்க் – 7.25%
  • பேங்க் ஆஃப் இந்தியா – 7.35%
  • பேங்க் ஆஃப் பரோடா – 7.50%,
  • கனரா பேங்க் – 7.30%,
  • பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா – 7.70%,
  • இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் – 7.55%,
  • பஞ்சாப் நேஷனல் பேங்க் – 7.40%,
  • யூசிஓ பேங்க் – 7.70%,
  • யூனியன் பேங்க் – 7.40%

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here