கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து – அமெரிக்காவில் மனிதர்களுக்கு பரிசோதனை..!

0

அமெரிக்காவில் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை முதலில் மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் முயற்சி தற்போது தொடங்கி உள்ளது. இதனால் விரைவில் கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7000 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், இந்த வைரஸ் 125 பேரை தாக்கியுள்ளது. டெல்லியில் ஒருவரும் கர்நாடகாவில் ஒருவரும் பலியாகியுள்ளனர். வேகமாக பரவி வரும் இந்த வைரஸை தடுக்க எந்த மருந்தும் இதுவரை இல்லாமல் இருந்தது.

கொரோனா தடுப்பூசி:

தற்போது இந்தியா, நார்வே உடன் இணைந்து அமெரிக்கா தயாரித்து இருக்கும் தடுப்பூசியை பரிசோதனை செய்ய அமெரிக்காவை சேர்ந்த 43 வயதான ஜெனிபர் ஹல்லர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பரிசோதனை அடிப்படையில் தடுப்பு ஊசி மருந்து செலுத்தப்பட்டது. அவர் தற்போது நலமாக இருக்கிறார்.

அமெரிக்காவின் சியட்டில் நகரில் இருக்கும் கைசர் பெர்மனன்ட் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் திங்கள் கிழமை நடந்த இந்த சோதனைக்கு தேசிய சுகாதார நிறுவனம் நிதி வழங்கியுள்ளது. மேலும் இத்தொற்று ஆரம்பக்காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் 2 வாரத்தில் சரி செய்து விடலாம். அதிக தொற்று பாதிப்பு இருந்தால் 3 அல்லது 4 வாரங்கள் ஆகும். கொரோனா அறிகுறிகள் இருந்தால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொள்ளவும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here