இந்த அறிகுறியெல்லாம் இருந்தா உடனே ஹாஸ்ப்பிட்டலுக்கு கிளம்புங்க.! கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி..?

0

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க முடியாமல் தற்போது அனைவரும் விழி பிதுங்கி உள்ளனர். இந்த வைரஸிற்கு இதுவரை யாரும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் வருமுன் காப்பதே சிறந்தது.

கோவிட் 19 அறிகுறிகள்:

கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் இதுவரை 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் தற்போது இந்தியாவில் 28 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸினால் உருவாகும் நோய்க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டு உள்ளது.

  • மூக்கு ஒழுகுதல் (சாதாரண சளி என நினைக்க வேண்டாம்)
  • தீராத தலைவலி
  • வறட்டு இருமல்
  • சுவாசக் கோளாறு
  • தொண்டை கரகரப்பு
  • மூச்சுவிட சிரமப்படுதல்
  • காய்ச்சல்
  • உடல் சோர்வாக இருப்பது
  • போன்றவை சாதாரண அறிகுறிகளாக தெரியலாம் ஆனால் இவை தான் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறியும் கூட. எனவே இதில் எதாவது ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பாதுகாத்துக் கொள்வது எப்படி..?

  • தங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்
  • அடிக்கடி கைகளை சோப்புகள் அல்லது அதற்கென உள்ள திரவங்களை பயன்படுத்தி கழுவுங்கள்
  • உங்களுக்கு இருமல் அல்லது தும்மல் வரும் போது மாஸ்க் போட்டு மூடிக் கொள்ளுங்கள்
  • ஒருமுறை உபயோகப்படுத்திய டிஸ்ஸு பேப்பரை உடனடியாக அப்புறப்படுத்தி விடுங்கள்
  • நன்றாக வேகாத இறைச்சியை உண்ணாமல் இருங்கள்
  • விலங்குகள் விற்பனைக் கூடங்களுக்கு செல்வதை தவிர்த்திடுங்கள்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here