இந்தியாவில் மே மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சமடையும் – உள்துறை வட்டாரம் எச்சரிக்கை.!

0

கொரோனா தொற்று தொடர்ந்து பரவுவதால் ஏப்ரல் 14 முடிவடைய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மே மாதம் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளது என்றும், அதன்பின்னர் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டாலும் அதேசமயம் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.

Coronavirus death count in India: Death toll at 2; States get into ...

இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் என்றும், அதன்பின்னர் குறையும் என்றும் என்றும் உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கை இப்போது இருப்பதை விட கடுமையாக நடைமுறைப்படுத்தினால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக விலகல்

நோய் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. எனவே, கூடுதல் பரிசோதனைகள் செய்யும்போது, வைரஸ் உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Rivers: social distancing sounds something an advertising ...

அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்தால், வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும். கொரோனாவிற்கு பல வல்லுநர்கள் தீவிரமாக மருந்து வருகின்றனர். தற்போது நாம் பின்பற்றி வரும் சமூக விலகல் ஒன்றே இதற்கான தடுப்பு மருந்து.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here