கடந்த 6 நாளில் இந்தியாவில் இரு மடங்கான கொரோனா பாதிப்பு, தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் – மத்திய சுகாதார அமைச்சகம்

0

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தாக்கம் தீவிரமடைய தொடங்கி உள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா:

இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 13,703 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,835 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள் விகிதம் 80:20 ஆக உள்ளது. 457 பேர் உயிர் இழந்தும் உள்ளதாக INDIA COVID 19 TRACKER தரவுகளின் மூலம் தெரிய வருகிறது. நாடு முழுவதும் தமிழகம், கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட 19 மாநிலங்களில் பாதிப்பு இருமடங்காகும் விகிதம் குறைகிறது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மே மாதத்திற்குள் 10 லட்சம் ஆர்டி பிசிஆர் கருவிகளை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். பிசிஜி தடுப்பூசி, பிளாஸ்மா சிகிச்சை உள்ளிட்டவைகளை கொரோனா தடுப்பூசியாக பயன்படுத்துகிறோம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here