கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பத்து பேர் பலி – மருத்துவ நிபுணர்குழு தகவல்!!

0

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் பத்து பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் இல்லை என முதற்கட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

பத்து பேர் பலி

இந்தியாவில் கடந்த 16 ம் தேதி முதல் முதல்கட்டமாக மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பத்து பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் தடுப்பூசி செலுத்திகொண்ட சுகாதார பணியாளர் ஒருவர் பலியானதை தொடர்ந்து தெலுங்கானாவில் மற்றும் ஒரு சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.  தடுப்பூசி செலுத்தப்பட்ட ஐந்து நாட்களுக்குள்ளாக இந்தியாவில் இதுவரை பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது தொடர்பாக தடுப்பூசியினால் உண்டாகும் பக்கவிளைவுகளை கண்டுபிடிக்கும் ஆணையத்தின் ஆலோசகர் என்.கே அரோரா கூறியபோது, ‘உயிழந்தவர்களை உடற்கூறு பரிசோதனை செய்தபோது அவர்கள் தடுப்பூசியால் மரணமடையவில்லை என முதற்கட்ட ஆய்வு கூறுகிறது. என்றாலும் மரணமடைந்த காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும்’ என கூறினார். இதுவரை பலியான அனைவருமே 25 வயது முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். மரணம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டபிறகு கிடைக்கும் அனைத்து தகவல்களும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here