குக் வித் கோமாளி செட்டில் கேக் கட் செய்து கொண்டாடிய அஸ்வின் – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தற்போது ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். தற்போது அஸ்வினுக்கு இன்ஸ்டா பக்கத்தில் ஒரு மில்லியன் பாலோவர்சை பெற்றுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக செட்டில் கேக் கேட் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி அஸ்வின்

தற்போது காமெடி நிகழ்ச்சிக்கும் சமையல் நிகழ்ச்சிக்கும் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படி காமெடி மற்றும் சமையல் என இரண்டையும் கலந்து தரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. தொடர்ந்து 2 சீசன்களிலும் அபார வெற்றியை பெற்று வருகிறது. முதல் சீசன் மாஸ் என்றால் இரண்டாவது சீசன் மரண மாஸாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிலும் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி காம்போ அசத்தலாக உள்ளது. போன தடவை ரம்யா பாண்டியனை போல இந்த தடவை அஸ்வின். தற்போது அஸ்வின் புகழ் ஓங்கியுள்ளது என்றே சொல்லலாம். அஸ்வின் இதுவரையில் பல ஷார்ட் பிலிம் மற்றும் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். கோயம்புத்தூரை சேர்ந்த இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையில் சென்னைக்கு வந்தவர்.  இவர் நடித்த ‘காதல் ஒன்று கண்டேன்’ என்ற படம் அதிக பிரபலமடைந்தது. இத்தனை நாட்கள் பிரபலமடையாத அஸ்வின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலம அடைந்தார்.

அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

மேலும் இவர் அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். தற்போது 1 மில்லியன் பாலோவர்சை தாண்டியுள்ளார் அஸ்வின். அதற்கு ஷிவானி கொடுத்த சர்ப்ரைஸ் கிபிட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. இந்நிலையில் குக் வித் கோமாளி செட்டில் அஸ்வினுக்கு கேக் கட் செய்து கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here