Friday, May 3, 2024

சிறுவர்கள் மூலமாக தான் கொரோனா பரவுகிறது – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

Must Read

கொரோனா என்ற வைரஸ் அதிகமா பரவ சிறுவர்கள் தான் கரணம் என்று அதிர்ச்சிககரமான ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளது. குழுந்தைகள் தான் அதிக பங்கு வகிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்:

கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் அனைத்தையும் அச்சபடுத்தி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். இந்த வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை தான் அதிகம் பாதிக்கின்றது என்று ஆய்வு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. தற்போது ஒரு ஆய்வில் சிறுவர்கள் தான் இந்த வைரஸ் பரவ பெரிய காரணமாக இருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் நோய் பரவல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் தமிழகம், ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் குறித்து ஆய்வு மேற்கொண்டது. தற்போது இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி லட்சுமி நாராயணன் இந்த ஆய்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டார். அதில் கூறப்பட்டதாவது “கொரோனா பரவ ஆரம்பத்தில் இருந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”

ஆய்வு முடிவுகள்:

“இந்த இரு மாநிலங்களுக்கும் “கான்டக்ட் டிரேசிங்” தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவிதத்திற்கும்அதிகமான மக்கள் மற்றவர்களுக்கு நோயினை பரப்புவதில்லை. அதிகம் பேரை சந்திக்கும் 10 சதவீத மக்கள் தான் நோயினை பரப்புகின்றனர்.”

பொது முடக்கத்தில் 350 ஆன்லைன் படிப்புகள் – சாதனை படைத்த கேரள பெண்!!

“இப்படி பரவுவதை 24 மணி நேரத்திற்குள் கண்டறிந்து தனிமைபடுத்தினால் பரவுதல் பெருமளவு குறையும். இந்த தொற்றினை 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் தான் பரப்புகின்றனர். இவர்கள் தான் வயதானவர்களுக்கு தொற்றினை கடத்துகின்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -