கண்ணம்மா பேக்குல அப்படி என்ன தான் இருக்கு?? வெட்டவெளிச்சமாக்கிய வெண்பா!!

0
bharathi kannama
bharathi kannama

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல பரபரப்பான கதை அம்சங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. தன் கற்பின் மீது பாலி கூறியதால் வீட்டை விட்டு வெளியேறும் கண்ணம்மா சில எபிசொட்களாக ஒரு பேக் உடன் ரோட்டில் நடந்து கொண்டுள்ளார். அதனால் பலரும் அதற்கு மீம்ஸ் வெளியிட்டு வந்தனர். தற்போது அந்த பேக்கில் என்ன உள்ளது என்பதை வெண்பா வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் சுமாராக போய்க்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சில எதிர்ப்பாராத திருப்பங்களால் விறுவிறுப்பாக போய்க்கொண்டுள்ளது.

Barathi_Kannama_TV_series (1)
Barathi_Kannama_TV_series (1)

பாரதிக்கும் கண்ணம்மாவிற்கு இடையே பிளவை ஏற்படுத்திய வெண்பா திட்டமிட்ட படி கண்ணம்மாவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். மேலும் கண்ணம்மா வருணுடன் சந்தோஷமாக இருப்பதாகவும் இல்லாத கதையை கட்டிவிடுகிறார். இதையும் நம்பி கண்ணம்மாவின் மீது அதிக வெறுப்பை ஏற்படுத்திக்கொள்கிறார் பாரதி.

kannamma memes
kannamma memes

கடந்த சில எபிசொட்களாக ரோட்டில் நடந்து கொண்டிருக்கும் கண்ணம்மாவை கலாய்த்து மீம்ஸ் கிரியேட் செய்து வெளியிட்டனர். அதுவும் வலைத்தளத்தில் வைரலானது. என்ன தான் சீரியலில் கண்ணம்மாவும் வெண்பாவும் அடித்து கொண்டாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலாய்த்து கொண்டு சந்தோசமாக பொழுதை கழிக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Barathi_Kannama_TV_series (1)
Barathi_Kannama_TV_series (1)

இதில் கண்ணம்மாவின் பேக்கை திறந்து பார்க்கிறார் வெண்பா ரசிகர்களும் அந்த பெக்கில் என்ன தான் இருக்கு என்று பார்க்க அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் கண்ணாடி வளையல்கள், மேக்கப் செட்டுகள், போன்றவை மட்டுமே இருந்துள்ளது.

bharathi kannama
bharathi kannama

இதற்கு வெண்பா இவ்வளவு நகைகளை வைத்து என்ன செய்ய போகிறாய் என்று கிண்டலாக கேட்க நகை கடை வைத்து பெரிய ஆளாகி பாரதி முன்பு வாழ்ந்து காட்ட போகிறேன் என்று கிண்டலாக கூறியுள்ளார் கண்ணம்மா. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here