கோவையில் தீவிரமெடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – 4 லட்சம் அபராதம் வசூல்..!

0
Coimbatore
Coimbatore

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேஸ் கோர்ஸ் சாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கோவை

சென்னைக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் எண்ணிக்கையில் அதிகம் கொண்ட இடம் கோவை. இதன் அடிப்படையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தன. இதனால் கோவையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Airport
Airport

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளியூர்களிலிருந்து வரக்கூடியவர்கள் வாயிலாக கொரோனா தொற்று ஏற்பட தொடங்கியது.

நடவடிக்கைகள்

இதனால் பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவது தொடங்கி, மாஸ்க் அணிவது வரை பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக மாஸ்க் போடாமல் வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை மற்றும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கோவை மாநகராட்சியில் இதுவரை 400000 ரூபாய் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

25 பள்ளிகள், ஒரு கோடி சம்பள மோசடி – நிஜ அனாமிகா யார் தெரியுமா..?

corona precautions
corona precautions

இதனிடையே கோவையில் சுமார் 30 பேர் கொரோனாவுக்கு சிகிசை பெற்றுவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிகையாக பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடங்களில் ஒன்றான ரேஸ் கோர்ஸ் சாலையை பயன்படுத்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here